வவுனியா – கோவில்குளம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கி கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற அவர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தார். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்