வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.