வவுனியாவில் உள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் தீடிரென பரவிய தீயை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து சம்பவம் நேற்றைய தினம் (04-07-2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போது குறித்த தீயானது மண்டபத்திலும் தீப்பிடித்து எரிந்திருந்தது.
தீ பரவுவதை அவதானித்த உத்தியோகத்தர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது பயனளிக்கவில்லை.
இதனையடுத்து வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.