வவுனியாவில் காணமல்போன வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (25.06) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் காணாமல் போன நிலையில் நேற்று முன்தினம் (27.06) மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.