வவுனியாவில் உள்ள வீதிகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் எனும் தலைப்பில் அநாமதேய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை சுவரொட்டியில் ‘அடக்குமுறைக்கு துணை போனவர்களையும் அடையாளம் காண்போம், அடக்குமுறையாளர்களை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போனவர்களையும் அழிப்போம், ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.