வடக்கு மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (04-02-2024) யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, இன்று (05-01-2024) வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு வவுனியாவிற்கு செல்லவுள்ளார்.
இவ்வாறான நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவியின் வீட்டில் நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், வவுனியாவில் அமைந்துள்ள வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றாவின் வீட்டிற்கு தடை உத்தரவை வழங்க பொலிஸார் இன்றைய தினம் சென்றுள்ளார்.
வீட்டில் அவர் இல்லாததால் அவரின் உறவினர்கள் குறித்த தடை பத்திரத்தை வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் குறித்த தடை பத்திரத்தை வீட்டின் கதவில் ஓட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது