தாழமுக்கம் காரணமாக தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் தீவை அண்மித்த கடற்பிராந்தியங்களை மறு அறிவித்தல் வரை செல்லவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் தாழமுக்கம் காரணமாக கடற்பிராந்தியங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடைக்கிடையே, மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.