வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் கொண்டாட்டத்திற்காக மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய வீட்டு வளாகத்தில் 4 வாள்கள், கஞ்சா மற்றும் ஐஸ் பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. மலை 4.30 மணியளவில் இராணுவப் புலனாய்வுத்துறையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.