முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் மூன்று மாவீர்களை மண் மீட்புக்காக அர்ப்பணித்த பெற்றோர் பெரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்து வருகின்றனர்.
தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த நிலையில் அவர்களை நினைத்து கலங்கிய கண்களுடன் தமது நினைவுகளை மீட்டுள்ளனர். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் மண்மீது தனது கணவருக்கு நேர்ந்த காயப்பட்ட சம்பவங்களையும் அந்த தாயார் நினைவு கூர்ந்தார்.
அதேசமயம் நமது மண் நம் கைக்குக் வரும் என அசையாத நம்பிக்கை கொண்டு தந்தையார் பேசியுள்ளமை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஆயிரமாயிரம் உறவுகளை இழந்த நம் உறவுகளின் துன்பம் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது. அவர்களை தேடிச்செல்லும் நம் உறவுப்பாலம் நிகழ்ச்சி துன்பப்பட்டவர்களுக்கு துயர் துடைக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என கூறினால் மிகையாகாது.