வற் வரி அதிகரிப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (01.01.2024) முதல் ஐஸ்கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (வற் வரி) 18 சதவீதமாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள் ஐஸ்கட்டியின் விலை அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை தற்போது எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமெனவும் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.