பிரான்சின் மருந்தாய்வு மற்றும் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான SANOFI, தங்களது கொரோனத் தடுப்பு ஊசியின் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளனர் என, தொழிற்துறை நிறுவனங்களிற்கான பிரதி அமைச்சர் அன்யேஸ் பனியே-ருனாஸே (Agnès Pannier-Runacher) தெரிவித்துள்ளார்.
இவர்களின் இரண்டாம் கட்டச் சோதனைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் எனவும், விரைவில் மூன்றாம் கட்டச் சோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டு, அதன் ஆய்வு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா, ஹொண்டூராஸ், மற்றும் பனாமாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 722 பேரில் இந்த இரண்டாம் கட்டச் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டச் சோதனைகளின் பின்னர், பிரான்சின் SANOFI மற்றும் பிரித்தானியாவின் GSK நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தக் கொரோனாத் தடுப்பு ஊசி, இந்த வருட இறுதிக்குள் சந்தைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.