நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை மற்றும் கடும் காற்று வீசி வருகின்றது.
இவ்வாறான நிலையில் அக்குரணையில் தற்போது கடும் மழையுடன் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் வாகனங்கள் மற்றும் வீதியோரங்களில் உள்ள பொருட்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படுகின்றது.
அதேவேளை கிறிஸ்மஸ் தினமான இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.