வனவிலங்கு திணைக்களம் மற்றும் தேசிய வனவிலங்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இந்த முன்னறிவிப்பின்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்த கட்டணத் தொகை
ஒரு நபருக்கு முன்பு இருந்த ரூ.9,688 கட்டணங்கள் ரூ.14,920 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக ரூ.5,232 அதிகரித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 649.2 வீத அதிகரிப்பை இலங்கை பெற்றுள்ளதுடன், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 37,760 பேர் வருகை தந்துள்ளனர். ஆகஸ்ட் இறுதி வரை, 496,430 பேர் வந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற ஏனைய பிரச்சினைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் குறைந்துள்ளது.
தற்போது இந்தப் பிரச்சினைகள் தணிந்து, இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் தொடங்கும் என சுற்றுலாத்துறை நம்புகின்றது.