வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்கள் செல்லுமென்று நாங்கள் உண்மையில் நினைத்திருந்தோம்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான முறையில் கையாண்டு, எமது நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும் வகையில் அதனை செயற்படுத்தி இருக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.