நடிகர் விஜய் தனது தாயார் ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இதன் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் தற்போது சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனது அம்மா ஷோபாவை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.
பல விமர்சனங்கள்
அதேவேளை சமீபத்தில், நடந்த ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபாவை சரியாக வரவேற்கவில்லை எனவும் கோயிலில் நடந்த பூஜையில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை எனவும் பல விமர்சனங்கள் வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமீபத்தில் தாய் – தந்தையின் 50-வது திருமணநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய்.
அப்போது ஷோபா உட்கார்ந்திருக்க, தாயருகே கீழே தரையில் அமர்ந்தபடி நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.