வட மாகாண காணி செயற்றிட்டம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (15) மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்களின் காணி பயன்பாட்டினை துரிதப்படுத்தல், நீர்ப்பாசனத்தை சீர்செய்தல், இடைப்போகப் பயிர்ச் செய்கையினை ஊக்குவித்தல் போன்றதான பல்துறைகளில் காணிப் பயன்பாடு பற்றி விரிவாக ஆரயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட நிலஅளவை அத்தியட்சகர், மாகாண ஓய்வுநிலை மாகாண உதவி ஆணையாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், HLP திட்ட உத்தியோகத்தர், மாவட்ட வனவளத் தினணக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.