வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அந் நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (15) உத்தரவிடப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் களனியைச் சேர்ந்த தாரக மதுஷன் ஹேரத் என்ற சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான ஆபாச காட்சிகளை அனுப்பி, வட்டிக்கு பணம் செலுத்தாவிடில் தன்னுடன் உறவுக்கு அழைத்ததன் மூலம் சந்தேகநபர் இணைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தில் விசாரணை நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.