யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் பொதுமக்களின் காணிகளை கையப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அத்துடன் நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும், காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை காணி அளவீட்டுக்கு குறுக்கீடு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.