குருநாகலில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லசந்த பண்டார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசந்த பண்டாரவின் தந்தை மீது தாக்குதல் நடத்த வாள்களுடன் ஒரு குழுவினர் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளனர்.
அதன்போது தந்தை வீட்டின் பின்வாசலால் தப்பியோடிய நிலையில் மகன் மீது குறித்த வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய வாய்பேச முடியாத லசந்த பண்டார உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொலையாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கில் மட்டும் தொடர்ந்து வந்த வாள்வெட்டு தற்போது தென்னிலங்கையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.