வவுனியா மாவட்டத்தில் வட மாகாண வெசாக் பண்டிகை இம்முறை இடம்பெறவுள்ளது.
சித்தார்த்த கௌதமர் லும்பினி என்னுமிடத்தில் பிறந்த நாள், புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள் மற்றும் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் என்பவற்றை முன்னுறுத்தி வருடாந்தம் வெசாக் பண்டிகை பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த ஆண்டிற்கான வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதன்படி வட மாகாணத்திற்கான வெசாக் பண்டிகை குறித்த திகதிகளில் வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள போதி தக்ஷினாராமய விகாரையில் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட மாகாணத்தின் உயர்மட்ட அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.