வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கி இருந்த நிலையில் குறித்த இல்லத்தில் இருந்து இந்து மத குரு ஒருவரின் உதவியுடன் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரிய முறையில் அழிக்கப்பட்டதாக ஆளுநர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி. எஸ். எம். சாள்ஸ் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில், வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது, அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்குவெட்டி தாக்குமாறும் கூறியுள்ளார்.
மேலும் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்தரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றப்பட்டு நிலத்தில் கிடங்கு வெட்டி தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.