வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணி முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வீதி வழியாக திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பல்வேறுபட்ட வாகனங்களில் வருகை தந்துள்ள இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு புகைப்படங்களை எடுத்தும் அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை பழைய செம்மலை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பேரணியின் போராட்டக்காரர்களை கொக்குளாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் ஒவ்வொரு வாகன இலக்கங்களாக பதிவுகளை மேற்கொண்டு புகைப்படம் எடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.