அரச வங்கியொன்றின் முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து வாடிக்கையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவக்கும் வங்கி முகாமையாளருக்கும் இடையில் வியாழக்கிழமை (22) பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி முகாமையாளரின் அறிவிப்பை அடுத்து பொகவந்தலாவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு கூடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளிட்டனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.