இலங்கையில் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டவர்கள் எதிர்காலத்தில் மீள பணத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் விமர்சகரும்,பொருளாதார ஆய்வாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது கடும் மோசமான நிலையை சந்தித்துள்ளது.வங்கியில் வைப்பில் இட்டவர்கள் எதிர்காலம் என்ன என்பது தொடர்பில் கடும் குழப்ப நிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில்,மக்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தினை மக்கள் டொலராக பெற்றுக்கொள்ள கூடிய நிலை ஏற்படாது .இருப்பினும் இலங்கையின் ரூபாவாக பெற்றுக்கொள் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கைக்கு தற்போது கடும் டொலர் தேவை அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி தற்போது ஆபத்தில் உள்ள நிலையில்,அதனை காப்பாற்றப்போவது யார் என்று எண்ணியே சவுதி ,அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியை மத்திய வங்கி நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.