சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவுக்கவும் நீதிவான் உத்தரவிட்டதார்.
லலித் கொத்தலாவல மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளதுடன், இதுவரை 8 சாட்சியாளர்கள் மரண விசாரணை தொடர்பான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த கொத்தலாவலவின் மனைவியின் சகோதரியான ஷெரின் பேஷான் விஜேரத்ன, பம்பலப்பிட்டி பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கொத்தலாவலவின் கீழ் பணியாற்றிய பல பணியாளர்களும் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.