லண்டனில் உள்ள Tower Hamlets Cemtery பூங்காவில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கொலையாளி குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு 20,000 புவுண்ட் பண பரிசு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள Tower Hamlets Cemtery பூங்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மர்மமான முறையில் Kankanamalage என்ற ஓரினச்சேர்க்கையாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இவர் இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மர்மமான முறையில் உயிரிழந்து கிடைந்த இலங்கையரின் உடலை மீட்டு பொலிஸார் பிரேத பரிசோசதனைக்கு அனுப்பி வைத்தபோது அவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தினரிடையே பெரும் அச்சம் நிலவி வருகின்றது.
மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் உடல் மீட்கபட்ட Tower Hamlets Cemtery இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டதால், இந்த கொலை சம்பவம் மிக பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தை விசாரிக்க தற்போது சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். கொலையாளியை அடையாளம் காணும் நபர்களுக்கு 20,000 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸார் இருவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் இது குறித்த தகவலை பொலிஸாரிடமோ அல்லது ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தினரிடமோ தெரிவிக்கலாமென கூறியுள்ளனர்.
இதேவேளை பொலிஸார் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் இரண்டு நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படியும், நீங்கள் தெரிவிக்கும் தகவல் அனைத்தும் மிகுந்த பத்திரமாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும் என இதன்போது மக்களுக்கு பொலிஸார் உறுதி அளித்துள்ளனர்.