அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன்படி, உரிமம் பெற்ற இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 345 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலையானது சில வங்கிகளில் 330 ரூபாவாகவும், இன்னும் சில வங்கிகளில் 335 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.