இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடமும் ஆராய்ந்து பேசவேண்டும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சானது ஒரு பொறுப்பற்ற செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் மக்கள் எங்களிடம் கேட்கின்றனர் ஆட்சியை எவ்வாறு மாற்றுவது என்று அவர்களிடம் நான் கேட்கின்றேன் இன்று ஆட்சி செய்வது யார் கோட்டபாய குடும்பத்தினர் மட்டும் தானே ஆகவே மிக விரைவில் இந்த ஆட்சியாளர்கள் வீடு செல்வார்கள்.
இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் பிரச்சனை இவை எல்லாமே ஒரு நாடகமாக தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒன்று சேர்ந்தவர்கள் இன்று பல கதைகளை கூறுகின்றனர் தெற்கு வர்த்தகர்கள் கூறுவதைத் தான் கிழக்கிலுள்ள வர்த்தகர்களும் கூறுகின்றனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.
இன்று எல்லாத்துக்கும் விலைவாசி அதிகரித்துக் காணப்படுகின்றது வாங்குவதற்கு பொருள் இல்லை கேஸ் வெடிப்பு என்கின்றார்கள் இது எல்லாமே ஒரு நாடகம்.
இலங்கையில் டொலர் இல்லை என்பவர்கள் பாலங்களை அமைக்கின்றார்கள் வீதிகளை அமைக்கிறார்கள் சொகுசு வாகனங்கள் இழக்கின்றார்கள் பாதுகாப்புக்கு பல வாகனங்களில் செல்கின்றார்கள் டொலர் இல்லை என்றால் எவ்வாறு இப்டி செயல்பட முடியும்.
இந்த ராஜபக்ச குடும்பத்தின் நாடகத்தை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர் அதை மிக விரைவில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மக்கள் தக்க பாடம் படிப்பிக்க காத்திருக்கிறார்கள் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆகவே கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மக்களும் எங்களோடு சேர்ந்து நாங்கள் விட்ட பிழைகளையும் எதிர்காலத்தில் நாங்கள் செய்யக்கூடிய விடயங்களையும் கலந்து ஆலோசித்து பேசி ஒரு நல்லதொரு ஆட்சியை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.