இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டத்தில் நாயின் கழுத்தில் ‘ராஜபக்ஷவை நாய்கள் என்று அழைக்காதீர்கள், அது எங்களை அவமதிக்கும் செயலாகும்’ என்று எழுதப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.