ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் பெரமுனவின் தலைவர் பதவியில் மஹிந்த ராஜபக்சவும், செயலாளர் பதவியில் சாகர காரியவசமும் நீடிப்பார்கள். அதேசமயம் தேசிய அமைப்பாளர் பஸில் ராபக்ச, தான் வகிக்கும் பதவியை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார் படுத்தும் நோக்கிலேயே மொட்டு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.