மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். உத்யோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டாகும். ஒரு சில ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர வழி உறவுகளுடன் சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் . பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலர் கடன் வாங்க நேரிடும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். கொடுத்த கடன் தொகை சிறிது தடங்கலுக்கு பிறகு வந்து சேரும். தொழில், வியாபாரம் சராசரியான அளவில் நடக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பிறருடனான கொடுக்கல் – வாங்கல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டின் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடங்களில் சிலருக்கு பணிச்சுமை அதிகம் ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் விலகும். திருமணம் போன்ற சுப காரியமுயற்சிகள் வெற்றி பெறும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். சிலர் வீடுகளுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பண வரவு உண்டாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். உறவுகளுடன் இருந்த பகை நீங்கும். பணியிடங்களில் மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் கவனமாக பழக வேண்டும். பொருளாதார ரீதியிலான உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். நெருங்கிய உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் மற்றும் மனம் உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உண்டாகும். வாங்கிய கடனை வட்டியும், முதலுமாக அடைப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் பணியிடங்களில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சிலருக்கு பெண்களால் நன்மை உண்டாகும். எதிரிகளின் போட்டி, பொறாமைகள் அகலும். சிலர் ஆன்மீக யாத்திரை செல்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பிறருடனான விவகாரங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வியாபாரங்களில் கூடுதல் முயற்சி செய்து உழைத்தால் நல்ல லாபம் பெறலாம். உடல் மற்றும் மனதளவில் மந்தநிலை ஏற்படும். வெளியில் செல்கின்ற பொழுது அதிக கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களால் ஆதாயம் உண்டாகும்.
மீனம்:
மீனராசியினருக்கு இன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். தம்பதிகள் இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிட மாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். சிலருக்கு தந்தை வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் அடைவதில் இருந்த தடை நீங்கும்.