மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். ஒருவரிடம் பேசும் பொழுது சுயத்தை இழக்காமல் பொறுமையுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியடையும். கணவன் மனைவிக்குள் இருக்கும் வெறுப்புகள் மறையும். தொழில் முறை போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் தேவை. அடுத்து என்ன நடக்கும் என்று வீணாக பயப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் நடப்பது நடக்கும் என்று விட்டுவிடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி தடைபடலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனத்தை ஒரே இடத்தில் முடக்கி போடாமல் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சிந்திப்பது நல்லது. கணவன் மனைவி இதய விட்டுக் கொடுப்பது நல்லது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகம் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுமையை இழக்காமல் பேசுவது நல்லது. உங்களை சிலர் உணர்ச்சிவசப்படுமாறு தூண்டி விடுவது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் உங்களுடைய இலக்கை நோக்கி பயணிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடன்களை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கலாம் இதனால் மன சுமை கூடும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க திணறுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய உத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சில தடைகள் வந்து செல்லலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் தவறை உணரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நேர விரயத்தை செய்வதில் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய புதிய விஷயங்களை தேடி தேடி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் குழப்பமடைய கூடும் என்பதால் முன்வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலம் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல தடைகளை தாண்டி முன்னேறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதில் பின் வாங்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விரயங்கள் ஏற்படக்கூடும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தடைபட்ட விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு கைகூடி வரும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதை அலைபாயாமல் பார்த்து கொள்வது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம். புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. தேவையற்ற பயத்தை தூக்கி எறியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள நீங்கள் நினைத்ததை அடைவதில் தடைகள் வரலாம், முயற்சியை கைவிட்டு விட வேண்டாம். உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் உண்டு.