மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபயோக பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் புத்துணர்வுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையில்லாமல் எரிந்து விழுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கூடும். புதிய ஒப்பந்தங்களை பொறுப்புணர்வுடன் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பலவீனம் எது? என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்தநிலை காணப்பட்டாலும் வர வேண்டிய இடத்தில் இருந்து பணவரவு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி இருந்த சிக்கல்கள் விடுபடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முழு கவனத்தையும் ஓரிடத்தில் செலுத்துவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் தீரும். வெளியிட பயணங்களின் பொழுது புதிய நண்பர்களை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அலட்சியம் வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சல் மிகுந்த காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். வம்பு வழக்குகள் தேவை இல்லாமல் உங்களைத் தேடி வரும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் போராடிய போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். திடீர் அதிர்ஷ்டம் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக இருக்கப் போகிறது. புதிய நண்பர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த மகிழ்ச்சி குறையும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை இழக்க வேண்டாம். சுய தொழிலில் எதிர்பாராத வகையில் கிடைக்க இருந்த வாய்ப்புகள் தட்டி போக வாய்ப்பு உண்டு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் எதிரிகளாக மாறக்கூடும் எச்சரிக்கை வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகளுக்கு வருத்தப்பட கூடும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரலாம் எச்சரிக்கை தேவை.