மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பொருளாதார பற்றாக்குறையை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. குடும்ப பொறுப்புகள் கூடும் எனவே மனதை அதற்கு ஏற்ப தயார் செய்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நீங்கள் முக்கியமான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் கொள்ளக்கூடாது. முன்வைத்த காலை பின் வைக்காமல் முடிவெடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூல பலன்கள் கிட்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செயல்திறன் ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் டென்ஷனை உண்டாக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த வேலைகளையும் சேர்த்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. முன்கோபம் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதால் பொறுமையாக இருப்பது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் சாதகமான பலன்களை கொடுக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும். தடைபட்ட காரியங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறி உங்களிடம் வருவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால் பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் முன்கூட்டியே உச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபம் பல இழப்புகளை கொடுக்கும் என்பதால் விவேகத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பான முறையில் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் அமையப் போகிறது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே பேச்சில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு உறுதியையும் மற்றவர்களுக்கு அவசரப்பட்டு கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களின் ஆதரவை தகுந்த சமயத்தில் பெறுவீர்கள். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் செலவுகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தீட்டிய திட்டங்கள் இடையூறு இல்லாமல் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விமர்சனங்கள் பல வகையில் எழக்கூடும் எனினும் தன்னம்பிக்கையை தளர விட வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும், எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் உங்களைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.