மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. நீங்கள் தொட்டது ஜெயம் ஆகும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுயமாக சிந்திப்பது நல்லது. அடுத்தவர்களுடைய சொல் கேட்டு ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமையின் மீது கூடுதல் அக்கறை கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் இனிய பலன்கள் நிறைந்த அற்புதமான நாளாக அமையப் போகிறது. எடுத்த காரியத்தில் வெற்றி பெற விநாயகரை வழிபடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விளம்பர யுக்திகள் அறியக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பேச்சில் அதிருப்தி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் பொன் நாளாக அமையும், அற்புத பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த விரிசல் மறைந்து ஒற்றுமை பலப்படும். சுய தொழிலில் எதிர்பாராத அளவிற்கு திருப்பங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் பொருளாதார முன்னேற்றம் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும், ஏற்றம் நிறைந்த நாளாகவே அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பிக்க வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிடுதல் நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்நாள் மறக்க முடியாத சில நினைவுகளை சுமக்க கூடிய அற்புதமான இருக்கிறது. உங்களை விட்டு பிரிந்தவர்கள் வந்து சேர்வார்கள். சுயதொழில் செய்பவர்கள் சுயலாபம் கருதி எந்த ஒரு குறுக்கு வழியிலும் செல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் கருணை பொங்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்ளும் பாக்கியம் உண்டாகும். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்கு பேசும் பேச்சில் கடுமையை குறைப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்நாள் கேட்டது கிடைக்கக்கூடிய வரங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் உங்கள் கனவுகள் நினைவாக கூடிய அற்புதமான வாய்ப்புகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நடக்கவில்லையே என்று நினைத்த ஒரு காரியம் நடக்கும். சுபகாரிய தடைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் குடும்ப பிரச்சனைகளில் அவசரமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இழுப்பறியில் இருந்து வந்த சில வேலைகள் முடிக்கக்கூடிய வாய்ப்பு கிட்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்நாள் கற்பனை வளம் பெருக கூடிய அற்புத நாளாக அமைய பெற்றிருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் முன்கூட்டியே நீங்கள் ஒரு வழிகாட்டுதலை திட்டமாக தீட்டி வைத்திருப்பீர்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்க புதிய உத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய விஷயங்களில் பெற்றோர்களின் ஆதரவு கிட்டும்.