மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சிலருக்கு நன்மைகள் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உடல், மனம் உற்சாகமாக இருக்கும். வாராக் கடன் வசூலாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கு,ம். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களிலும், பேச்சுக்களிலும் கவனம் தேவை. சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். புதிய முயற்சிகளில் எதுவும் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பணி இடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் பெருகும். சிலருக்கு நண்பர்கள் வழியில் பணவரவு உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றையதினம் அரசு ரீதியான காரியங்களில் அனுகூலங்கள் இருக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் புதிய வீடு,வாகனம் போன்றவற்றை சிலர் வாங்குவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று இழுபறிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். புதிய மனிதர்களால் சிலருக்கு உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பொருள் வரவு தாராளமாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு மனதில் கவலைகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கடின முயற்சி செய்ய வேண்டும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படும். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பண வரவு சற்று இழுபறிக்கு பிறகு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மிக சிறப்பான நாளாக இருக்கும், சிலருக்கு தூரத்து உறவினர்கள் வருகையால் நன்மைகள் ஏற்படும், குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும், சிலர் புது வாகனம், வீடு போன்றவை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.