மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையை கடைப்பிடிக்க கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய முன்கோபம் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். முடியாத வேலையையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் வீண் மன கசப்புகள் ஏற்படலாம் எச்சரிக்கை வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் செலவு ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் பகைமை வேண்டாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய இருக்கிறது. கவலைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் பயணிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் அனுகூல பலன் தரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குழப்பமான மனநிலையில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் இருந்து வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கட்டுப்பாடு உங்களை உயர்த்தக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கையின் பலம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் வந்து சேரலாம் எனவே ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்வு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்த வேலை முடியும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமைகளை செய்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய முயற்சிகள் பலிதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் உதவி புரிவார்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் செயல்படக் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே சிறிய சண்டையும் பெரிதாகலாம் எனவே அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் யோகம் வரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குறுக்கு வழியில் செல்லாமல் எப்பொழுதும் நேர்வழியில் செல்வது நல்லது. தேவையற்ற வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் உயரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிலர் உங்களுடைய கோபத்தை தூண்டி விட வாய்ப்புகள் உண்டு முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித அறிவால் அனுகூல பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.