மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் தரும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபார ரீதியான நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொலைதூர போக்குவரத்து விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கஷ்டமான விஷயங்களும் சுலபமாக முடியக்கூடும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஜாக்பாட் அடிக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் கவனம் வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விமர்சனங்கள் மன உளைச்சலை கொடுக்கலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில தர்ம சங்கடமான சூழ்நிலை வரப்படும் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற சச்சரவுகளை உருவாக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் இழுபறையில் இருந்த வேலைகளையும் சேர்த்து செய்வீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. குடும்ப சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எவரையும் நம்பி பெரிய தொகையை கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நற்பலன் தரும் அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய சிந்தனை வலுவாக கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் சுய லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி இன்னும் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன்னேற்றங்களில் சில தடை கற்கள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழக்கூடும், முன்னெச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் அவசரம் இல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படி ஆனால் நிகழ்வுகள் நடக்கக்கூடும். குடும்பத்தில நல்ல விஷயங்களை கேட்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிறு சிறு தடைகள் நீங்கும். உங்களுடைய சிந்தனை வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் லாபம் பெறக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை, எங்கும் பொறுமையை இழந்து விட வேண்டாம்.