மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதையும் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய தொழில் செய்யும் எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய கை எங்கிலும் ஓங்கி இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். தொழிலில் எதிர்பாராத லாபம் காணலாம். வியாபார யுக்திகளை புதிதாக கையாளுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய இனிமையான அமைப்பாக இருக்கிறது. பொருளாதார சிக்கல்கள் மறைந்து வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் வம்புக்கு செல்ல வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தான் தோன்றித்தனமாக செயல்படுத்த வேண்டாம். குடும்பத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு புதிய காரியத்தையும் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரம் ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சிற்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் வரக்கூடும் என்பதால் நேர்வழியில் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிலவையில் இருக்கும் பழைய கடன்களும் வசூல் ஆகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. இதனால் கடைசி நேர அவசரத்தை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளை தாண்டிய வெற்றி உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல அமைப்பாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சாதுரியமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சிய படுத்த வேண்டாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முரண்பட்ட கருத்துக்கள் பலருடன் ஏற்படலாம் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். என்றோ செய்த புண்ணியத்திற்கு பலன் இன்று கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இணக்கம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் பட்டதை எல்லாம் பேசாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுய சிந்தனையில் முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் அம்வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை சந்திக்கலாம் எனினும் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் நாணயத்தால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.