மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை தரும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீடு, மனை வாங்குவதில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ரகசியங்களை வெளியில் கூறாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உங்களை நம்பி இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மூத்த அதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரபலமாக இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் அனுகூல பலன்களை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை தடை இன்றி முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடை இல்லாத வெற்றியை காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமான முயற்சிகள் சாதகமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் தடைகளை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கக்கூடிய அனுகூல பலன் தரும் நல்ல நாளாக இருக்கிறது. கொடுத்த இடத்திலிருந்து கொடுத்த பணம் இடையூறுகள் இல்லாமல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் வரலாம் ஆடம்பரத்தை குறைக்க வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த அசௌகரியமான சூழ்நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான பாதைகள் பிறக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவம் உங்களுக்கு கை கொடுப்பதாக அமைப்பு இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சிக்கல்கள் வரலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் நிகழ வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டது துலங்கும் நல்ல நாளாக இருக்கிறது. எதிலும் தடைகளை தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் அனாவசியமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் தொடர்பான விஷயங்களில் புதிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய இனிய பலன்கள் உண்டாகும். நினைத்ததை நினைத்து படி சாதித்து காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒரு வித கலக்கம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழந்ததும் திரும்பி கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைந்தாலும், வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரலாம் எனவே திட்டமிட்டு செயல்படுங்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுபகாரியங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேற்றுமை மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.