மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியம் முடியவில்லை என்கிற டென்ஷன் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் படிப்படியாக மாறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எப்படிப்பட்ட சிக்கல்களையும் எளிதாக கையாளுவீர்கள். அந்த அளவிற்கு மனப்பக்குவம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு காரிய தடைகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழக்கூடும் எனவே தேவையற்ற வார்த்தைகளை வீச வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது எதிர்பார்த்தபடி நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் டென்ஷன் குறைய கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சல் அதிகரித்து காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லையை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கப் போகிறது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும் நல்ல நாளாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியத்தில் உறுதியான மனப்பான்மை இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. எதையும் எடுத்தோம் என்று முடிவு செய்யாமல் பொறுமையுடன் நிதானத்தை கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் இருந்தாலும் பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக அமையப் போகிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகளை கேட்கலாம். சுப காரிய தடைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நினைத்ததை நினைத்தபடி நடத்தி கொள்ளும் யோகம் உண்டு. உற்றார் உறவினர்களிடமிருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு காரியத்தில் சாதுரியம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சமயோஜிதமாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்க கூடிய இனிய நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் சிக்கல்கள் ஏற்படலாம் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை அலட்சிய படுத்தாமல் உடனுக்குடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணவரத்து தடைபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்கள் கையில் இருந்தாலும் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுத்த பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு படபடப்பு, கோபம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீரற்றதாக இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப சுமை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து லாபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் புதிய நம்பிக்கையுடன் முயற்சி செய்வது நல்லது. இதுவரை உங்களை சுற்றி இருந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்களை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த வழக்குகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு கடினமான முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.