மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சாதக பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு பணம் வந்தாலும் வந்த வழியே செல்லும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புத்திசாலூரியத்தால் எதையும் சமாளித்து வெற்றி காணக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த அனாவசிய குழப்பங்களில் இருந்து மீள போகிறீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு பலன் கால தாமதமாக கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கவலை அகழும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் கவலையை வீணாக சுமக்க வேண்டாம். நீங்கள் எண்ணியது எண்ணியபடி ஈடேறும் என்பதால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உற்ற நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகளில் சாதக பலன் கிட்டும். ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி பெறக் கூடிய அமைப்பாக இருப்பதால் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். தொலைதூர இடங்களில் இருந்து மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சுயநலத்துடன் அல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுவீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்களில் எதிர்மறையான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற ஆர்வத்தை உண்டாக்கி கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை உங்களை சுற்றி இருந்து வந்த போட்டி நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதுவிதமான தைரியத்தை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைபட்ட காரியங்களை மீண்டும் எடுத்து செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் அவ்வபோது தோன்றி மறையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பண பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் சேர்க்கையால் அனுகூலமான பலன்கள் காணலாம். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொடர் முயற்சி பல்வேறு நலன்களை கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதிலும் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே இருந்து வந்த உறவு சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் நினைத்தபடி கிடைக்கும். பல பெரிய வல்லுநர்களின் அறிமுகம் திட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் கிட்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் வெற்றி காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வெளியிடங்களில் கடினமான தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நன்மை தீமை என பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொலைதூரப் போக்குவரத்து விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத சில திருப்பங்களால் வெற்றி காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் தன லாபம் பெறலாம். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்துடன் எதையும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. உங்கள் மீதான மதிப்பு மரியாதையும் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசௌகரியமான ஒரு உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் வேலையில் கூடுதல் நாட்டம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சலசலப்புகள் அடங்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணன் ஒரு சிலருக்கு மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய ஒத்துழைப்பை கூடுதலாக கொடுப்பது நல்லது.