மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப விஷயங்களில் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறவினர்கள் மூலம் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாகும் யோகம் உண்டு. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளை பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாகக்கூடிய இனிய நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சமாளிக்க கூடிய சாமர்த்தியம் ஏற்படும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய முடியாத வேலையும் சேர்த்து முடிக்கக்கூடிய பொறுப்புகள் உண்டாக்கலாம். சிந்தனை தெளிவாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வரக்கூடும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. நீங்கள் எதிர்பாராத ஒரு விஷயத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவலையை மறந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் திட்டமிடாமல் எந்த ஒரு காரியத்தையும் மும்முரமாக செயல்படுத்தாதீர்கள். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய யுக்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர் விடக்கூடிய இனிய நாளாக இருக்கும். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் நிறைந்த இனிய நாளாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு ஊடல்கள் மறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நீண்ட நாட்கள் நடக்கவில்லையே என்று நினைத்த ஒரு காரியம் நடக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திக்க போகிறீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் அனாவசிய இழப்புகளை ஏற்படுத்தலாம் கவனம் வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பேசி ஊதி பெரிதாகாதீர்கள். எதையும் நிதானத்துடன் கையாள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம், புத்தி கூர்மையுடன் செயலாற்றுவது நல்லது. உடல் நலனை கவனியுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசதியுடன் காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். சுப காரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியை கையாள வேண்டாம் ஆபத்து வரும்.