மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பணவரவு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மங்கள காரியங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமை மிக்க செயலால் வெற்றிகள் குவிய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்புது விஷயங்களை அனுபவிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள் அலட்சியம் வேண்டாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பயணங்கள் மூலம் அலைச்சல் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமுக நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் ஆதாயம் கட்டும். குடும்பத்தில் இருந்து வந்த கை மீறிய செலவுகள் கட்டுக்கடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் மலை போல் பிரச்சினை வந்தாலும் பனிபோல் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனாவசிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீண் ஆடம்பரங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் செல்வதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி மார்க்கத்தில் மனம் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் உங்களுடைய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. கூடுதல் உழைப்பு காட்டாமல் இருந்தால் வெற்றிகள் உங்கள் வசம் வராது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கின்ற முயற்சிகளில் எப்படி பட்டாவது வெற்றிக்கான கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்னேறக்கூடிய பாதைகளை காணப் போகிறீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பங்களிப்பும் கூடுதலாக தேவை எனவே பொறுப்புணர் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அந்தஸ்த்து உயரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்து சிறு சிறு உடல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அரசு வழி காரியங்கள் அனுகூலப் பலன் கொடுக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முன் கோபத்தை தவிர்த்து பிரச்சனையை பொறுமையாக பேசி முடிவு கட்டுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் மூலம் தேவையற்ற வம்பு வழக்குகள் வரக்கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்றம் உண்டாகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாக்கு வன்மையுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளில் காலதாமதம் செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் இழுபறியாக இருக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு உங்கள் திறமைகளை கூடுதலாக மேம்படுத்துவது நல்லது.