மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொலைதூரப் போக்குவரத்து முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் மற்றவர்களின் இடையூறு இல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை கூடுதல் அக்கறை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களை பற்றிய சிந்தனையில் ஈடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான பிரச்சனைகள் வந்து செல்லலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த மோதல்கள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற வம்பு, வழக்குகளை இழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனப்போராட்டங்கள் மறையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் உண்டாகலாம் விழிப்புணர்வு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த சில சங்கடங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளுக்கு சவாலான வேலைகள் வந்து குவிய போகிறது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆற்றல் மிகுதியாக காணப்படும். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாக போட்டியாளர்களின் மத்தியில் உங்கள் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன போராட்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதிக்கு இடையூறுகள் வரலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரும். ஆடம்பரத்தை, அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிட்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சாதனைகளை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிலும் உங்களுடைய முன்கோபத்தை காட்டி விட வேண்டாம். பொறுமை கடலினும் பெரிது என்பதை உணரக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்செயல்கள் பல செய்வதற்கு நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிந்தனையில் குழப்பம் ஏற்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து காட்டுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தடைப்பட்டு வந்த சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் தொடங்கும் இனிய நாளாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத ஒரு பயம் மனதை தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. எதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று விட்டு விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு விடா முயற்சி பலன் தரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி மார்க்கம் பக்கம் உங்களுடைய மனம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமுதாயத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் நிகழும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.