மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர விரயம் செய்யாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற கடன் தொல்லைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. பல எதிர்ப்புகளை மீறிய வெற்றி உங்களுக்கு கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வேலை செய்ய வேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை வளர்க்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும் நல்ல நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் வெற்றிக்கான கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த தடைகளை தாண்டிய அற்புதங்கள் நிகழ இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூரப் போக்குவரத்து மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கையில் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த முடிவுகள் எடுப்பது நல்லது. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால் மீண்டும் குழம்பி போக வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கஷ்டமான வேலைகளும் சுலபமாக முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை பெரிது படுத்த வேண்டாம். மற்றவர்களுக்கும் செவி சாய்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும் இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு, வெளியூர் தொடர்பான விஷயத்தில் சாதக பலன் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டிய முன்னேற்றம் காண போகிறீர்கள். மறைமுக எதிரிகளின் தாக்கம் குறையும். குடும்பத்தில் உங்களை நம்பி சிலர் புதிய பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பமான சூழ்நிலை நீடிக்கும். நீங்கள் எந்த ஒரு முடிவையும் ஆறப் போடுவது நல்லது உடனே எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களிடம் இருக்கும் நெகடிவ் வைப்ரேஷன்கள் உங்களை சுயமாக சிந்திக்க விடாமல் தடுக்கும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர செலவுகள் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்தில் கவனம் தேவை. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளும், வேலைகளும் கூடும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் ரீதியான அசதி காணப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப பொறுப்புகளை நீங்கள் தட்டி கழிக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்கொணறுவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.