மேஷம் ராசி பலன்:
புதிய காரியங்கள் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். வீட்டின் அருகில் இருப்பவர்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு பிற்பகலுக்கு மேல் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்:
படைப்பாளிகளுக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பெற்றோர்கள் மூலம் இன்று அனுகூலம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகளுக்கு முற்பகலில் நல்லதொரு வியாபாரம் இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
பிள்ளைகளால் சிறு சிறு செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் நற்செய்தி வந்து சேரும். மதியத்திற்கு மேல் தொடங்கும் காரியங்கள் நன்மையில் முடியும். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை.
கடகம் ராசி பலன்:
புதிய முயற்சிகளை இன்று தொடங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்களிடமிருந்து உதவியோ நற்செய்தியோ வர வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு இன்றைய தினம் நல்ல லாபம் தரக்கூடிய தினமாக அமையும்.
சிம்மம் ராசி பலன்:
வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில உதவிகளை இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சகோதரர் சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். இறைவழிபாடு உங்களுக்கு இன்றைய தினம் அனுகூலத்தை உண்டாக்கும்.
கன்னி ராசி பலன்:
இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் நற்செய்தி கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறனை வெளிப்படுத்த இன்றைய நாள் சிறப்பானதாகும்.
துலாம் ராசி பலன்:
நண்பர்கள் மூலம் இன்று உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். குடும்பத்தாருடன் நிம்மதியாக நேரத்தை செலவிட வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் தங்கள் பார்ட்னர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்:
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது. நல்ல காரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் வீட்டில் இன்று எழும். அதேசமயம் பணரீதியான சில பிரச்சனைகள் எழவும் வாய்ப்பு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் பலரிடம் நற்பெயரைப் பெற வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்:
நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த உறவினர்களுக்கு இடையே கூட இன்று ஒற்றுமை மேலோங்கும். அழகு சார்ந்த விஷயங்களில் இன்று சற்று அதிகமாக கவனம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் இருந்து உங்களுக்கு உதவிகள் வரும். வியாபாரிகளுக்கு இன்றைய தினம் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது.
மகரம் ராசி பலன்:
இன்று தொழில் ரீதியாக மிக மிக கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தாருடன் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். சகோதர சகோதரி உறவில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்:
இன்று சற்று சோம்பலாகவே காணப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பிறரிடம் ஆலோசித்து செய்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சில சில சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு முற்பகலுக்கு முன் வியாபாரம் நல்லபடியாக இருந்தாலும் முற்பகலுக்கு பின் சற்று மந்தமாகவே இருக்கும்.
மீனம் ராசி பலன்:
இன்று எதையும் துணிந்து செய்யலாம். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பணத்தட்டுப்பாடு காரணமாக சில வேலைகளை ஒத்தி வைக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே நல்லதொரு அன்பு பரிமாற்றம் இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும்.