மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்று முக்கிய பிரமுகர்களால் ஆதாயமும் உண்டாகும். நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்று சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பண வரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்று உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றுகாலைப் பொழுது இதமாக விடியும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்று வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். சிலருக்கு அலுவலகப் பணகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும்.