மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களுடைய உதவி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியான விரயங்கள் ஏற்படலாம் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகம் தரும் செய்திகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை ஆற போடுங்கள். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும் இருப்பினும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடியான போட்டிகள் கிட்டும் தயாராக இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விரிசல் விழலாம், விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள் அலட்சியம் வேண்டாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் தாங்கும் இதயம் இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு திருப்தி தரக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சமூக அக்கறை மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று அமோகமான நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் புதிய விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு எதிரான கருத்துகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இரட்டிப்பு லாபத்தை காணப் போகிறீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் மறையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நடக்கும் யோகம் உண்டு. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியம் முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததை விடாமுயற்சியாக நடத்தி காண்பிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதியவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவசரப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற உன் கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக காணப்படுகிறது. எங்கும் எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று அனுபவ பூர்வமான முடிவுகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனையை தவிர்த்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வது நல்லது. வீண் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய நல்ல நாளாகும். ஆன்மீக ரீதியான சிந்தனை அதிகரிக்கும்.