மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த அளவிற்கு நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் வெளியிட பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சுப காரிய தடைகள் நீங்கும். சுய தொழில் ஏற்றம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடி மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட வருமானம் உயரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலட்சியத்துடன் இருந்தால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. முன்கூட்டியே திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்பழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் விரிசல் மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. தேவையற்ற மன உளைச்சலில் இருந்து வெளியில் வருவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி போட்டி, பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிக்க திணறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே தேவைகளை பூர்த்தி செய்ய அன்பு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற தீய நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஈடுபாடு கூடுதலாக எல்லா விஷயங்களிலும் இருக்கும். எதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சரியான முடிவு எடுப்பதில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் வட்டம் விரிவடையும். ஆரோக்கிய குறைபாடுகளை கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக பயணங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்கள் கை ஓங்கி இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் இனிய நாளாக இருக்க போகிறது. தேவையற்ற கடன்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் நினைத்த பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை வளரும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுப்புகளை கூடுமானவரை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளை துவங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்.